Sunday, September 06, 2026

சிவயோக சுவாமிகள் அருளிய நற்சிந்தனைகள் - நல்லூரான் திருவடி

 யாழ்ப்பாணம் சிவயோக சுவாமிகள் அருளிய நற்சிந்தனைகள்

சிவசிவ என்னச் சிவகதியாமே

தந்தி முகத்தனைச் சங்கரன் மைந்தனைத்

தொந்தி வயிறனைத் தோடணி செவியனை

இந்திர னுக்கரு ளீந்த இறைவனை

மந்திர ரூபனை நான்மற வேனே.


நல்லூரான் திருவடி


நல்லூரான் திருவடியை

நான்நினைத்த மாத்திரத்தில்

எல்லாம் மறப்பேனெடி - கிளியே!

இரவுபகல் காணேனெடி.



ஆன்மா அழியாதென்று

அன்றெனக்குச் சொன்னமொழி

நான்மறந்து போவேனோடி - கிளியே!

நல்லூரான் தஞ்சமெடி.



தேவர் சிறைமீட்ட

செல்வன் திருவடிகள்

காவல் எனக்காமெடி - கிளியே!

கவலையெல்லாம் போகுமெடி.



எத்தொழிலைச் செய்தாலென்

ஏதவத்தைப் பட்டலென்

கர்த்தன் திருவடிகள் - கிளியே!

காவல் அறிந்திடெடி.



பஞ்சம்படை வந்தாலும்

பாரெல்லாம் வெந்தாலும்

அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே!

ஆறுமுகன் தஞ்சமெடி.



சுவாமி யோகநாதன்

சொன்னதிருப் பாட்டைந்தும்

பூமியிற் சொன்னானெடி - கிளியே!

பொல்லாங்கு தீருமெடி.


கேட்க:
பாடியவர்: பொன். கணேசலிங்கம்


நற்சிந்தனைகள்

1. எங்கள் குருநாதன்

2. நல்லூரான் திருவடி

3. அத்துவிதப் பொருள்

4. மங்களம் ஜெய மங்களம்

5. திருப்பள்ளியெழுச்சி

0 comments: