Saturday, May 06, 2006

ஓரே மதம், அது அன்பு மதம்-பாபா

ஒரே மதம், அது அன்பு மதம் - பாபா

கவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா எந்த ஒரு புதிய மதத்தையும் நிறுவவோ, போதிக்கவோ முயற்சி செய்யவில்லை. அவருடைய பணியின் முக்கிய நோக்கங்கள்:
  • தனிநபருக்கு உதவுதல். இந்த உதவி மூன்று வகைப்பட்டது.
1. அவனிடம் இயல்பாகவே உள்ள தெய்வீகத்தன்மையை அவனே உணர உதவுதல். இறைவனுடன் இரண்டறக் கலப்பது என்ற இறுதி இலட்சியம் நோக்கிச் செல்ல உதவுதல்.
2. தெய்வீகம் என்பது அன்பு, கடமையில் காட்டப்படும் கச்சிதம் ஆகியவற்றில் அட்ங்கும் என்பதால் இவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்க உதவுதல்.

3. இதன் மூலமே வாழ்க்கையில் மகிழ்ச்சி, அழகு ஆகியவற்றை அநுபவிக்கச் செய்தல்.

  • எல்லாவிதமான மனித உறவுகளும் பின்வரும் அடிப்படைகளில் இயங்க வேண்டும் என்பதை உணர்த்துதல்: சத்யம், தர்மம், பிரேமை, சாந்தி, அஹிம்சை.
  • மதம் என்பதன் மெய்யான அடிப்படையினை உணர்த்துவதன் மூலம் எல்லா மதத்தினருக்கும் தங்கள் தங்கள் மதக் கோட்பாடுகளை மேலும் தீவிரமாகவும் மனப்பூர்வமாகவும் பின்பற்ற உதவுதல்.
  • இந்த இலட்சியங்களையெல்லாம் அடைய பின்வரும் கோட்பாடுகளை அநுசரிக்கும்படி கூறுகிறார் பாபா:

1. ஒரே மதம் அது அன்பு மதம்
ஒரே ஜாதி அது மனித ஜாதி
ஒரே மொழி அது இதய மொழி
ஒரே கடவுள் அவர் சர்வ வியாபி.

2. எப்போதும் கடவுளை நினைத்து உலகின் சகல ஜீவராசிகளும் ஜடப்பொருள்களும் கூட அவனது பல்வேறு வடிவங்களுள் ஒன்றே என்று உணருதல்.

3. எல்லா மதங்களின் இடையேயும் உள்ள ஒற்றுமைகளை அடிக்கோடிட்டுக் காட்டி, எல்லா மதங்களும் அன்பின் அடிப்படையில் உருவானவை என்பதைப் புரிந்து கொள்வது.

4. கடமையாற்றுவது என்பது இறைவனுக்குச் செய்யும் சேவை என்பதை உணர்ந்து செயல்படுவது.

5. வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்திலும் தெய்வீக அன்பு, கருணை, சகிப்புத் தன்மை, உதவுகிற இயல்பு ஆகியவற்றைக் கொணர்ந்து இவை மூலம் அந்தப் பிரச்சினைகளைச் சந்தித்து வெற்றி காணல்.

6. எல்லாக் காரியங்களையும் தார்மீக அடிப்படையிலும், பாபத்துக்கு அஞ்சும் அடிப்படையிலும் எடைபோட்டுச் செய்தல்.

7. வாழ்க்கையை நடத்தக் கடமையாற்றுவது தவிர ஆன்மீக, கல்வி அல்லது சேவா மார்க்கத்திலும் மனத்தைச் செலுத்தி இதன் மூலம் தனி நபர்களுக்கோ சமுதாயத்துகோ உதவ முயற்சி மேற்கொள்ளுதல். இதனைத் திட்டமிட்டும் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமலும் செய்தல். நம்மை யாரும் பாராட்ட வேண்டும் என்று கூட எதிர்பாராமல் இறைவனின் அன்பையும் அருளையும் பெறமட்டுமே செயலாற்றுதல்.

நன்றி: கல்கி (26.1.1992)

இன்று (06 மே 2006) ஸ்ரீ சத்யசாயி பாபாவின் தாயார் ஈஸ்வராம்மா அவர்களின் பிறந்ததினம் உலகெங்கும் பாபா பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இந்தக்கட்டுரை பக்திப்பூக்களில் பதியப்படுகிறது.

மேலும் வாசிக்க: மனிதாபிமானமே இவர் மதம்

14 comments:

VSK said...

ஜெய் சாயிராம்!

உலகம் முழுதும் அன்னையர் தினம் கொண்டாடப்படும் இந்நாளில் [மே6,7] அனைத்து அன்னையர்க்கும், ஈஸ்வராம்பாவை துதித்து, என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

ஜெய் சாயிராம்!

கால்கரி சிவா said...

சாய்ராம், என்னிடம் 56 பஜனை காசெட்களும் 5 சிடி களில் உள்ளன. உங்களுக்கு வேண்டுமென்றால் calgarysiva@gmail.com க்கு மின்னஞ்சல் செய்யவும். சுவாமியின் அன்பு பரிசாக அனுப்பி வைக்கப் படும்

நந்தன் | Nandhan said...

யாருங்க சொன்னது தமிழ்மணத்துல ஆரோக்கியமான எதிர் கருத்துக்கள் வளர்கப்படுவதில்லைன்னு...
இங்கே பாருங்க ஒருத்தர் பாபாவை கிழித்து எழுதிக்கொண்டிருக்கிறார், ஒருவர் பாராட்டி!

மற்றபடி இப்பதிவின் கருத்துக்களோடு எனக்கு பெரிய உடன்பாடில்லை.
கடவுளை துனைக்கு அழைக்காமல் இந்த கருத்துக்களை மக்களிடையே பரப்ப மூடியாதா?

Kanags said...

கருத்துத் தெரிவிக்க வருகை தந்த SK, கால்கரி சிவா மற்றும் நந்தன்|Nandhan அனைவருக்கும் நன்றி.

கால்கரி சிவா, உங்கள் அந்த CDக்களை மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறேன்.

VSK said...

இந்த ஒffஎர் எனக்கும் உண்டா, 'சிவா'?


இயற்கையைத் துணைக்கழைப்போர் சிலர்!
இறைவனைத் துணைக்கழைப்போர் சிலர்!
நமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்ளும் கருத்துச் சுதந்திரத்தை இன்னும், இன்றும் தருபவர்கள் இயற்கையும், இறைவனும் மட்டுமே!
இல்லையா, 'நந்தன்'?

கால்கரி சிவா said...

SK,

ஊங்களுக்கும் உண்டு. இதுவரைக்கும் இந்த 'பரிசை' இங்கிருந்து 20 பேருக்கு உலகம் முழுவதும் அனுப்பிருக்கிறேன். அபுதாபியில் இருக்கும்போது 100க்கும் மேல். உங்கள் விலாசத்தை எனக்கு மின்னஞ்சல் இடுங்கள்

Anonymous said...

பாபா பஜனையை
பார்ப்பவர்கள் எல்லோரும் தரவிரக்கம்
செய்யக்கூடியது போல் உங்கள்
வலைப்ப பதிவில் வைத்தால்
நன்றாக இருக்குமன்றோ?

Kanags said...

//பாபா பஜனையை
பார்ப்பவர்கள் எல்லோரும் தரவிரக்கம்
செய்யக்கூடியது போல் உங்கள்
வலைப் பதிவில் வைத்தால்
நன்றாக இருக்குமன்றோ?//

உண்மை. தற்போது Coolgooseஇல் உள்ளன. சில வேளைகளில் தரவிறக்கம் செய்வது கஷ்டமாக இருக்கும். விரைவில் எனது வலையிலிருந்து நேரடியாக இறக்க வழி செய்கிறேன். நன்றி.

SP.VR. SUBBIAH said...

அன்புமதம் பற்றி அற்புதமாய்ப் பதிவிட்டார்
அன்பாளர் கனகனார் ஆண்டுநூறு வாழ்க!

Kanags said...

சுப வீர சுப்பையா அவர்களுக்கு,
//அன்புமதம் பற்றி அற்புதமாய்ப் பதிவிட்டார் அன்பாளர் கனகனார் ஆண்டுநூறு வாழ்க!//

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

குமரன் (Kumaran) said...

சாயிராம். இன்று தான் இந்தப் பதிவைக் கண்டேன். சாயிராம்.

தமிழ்பித்தன் said...

எல்லாம் வல்ல இறைவன் எல்லொருக்கும் அருளட்டும்

Kanags said...

குமரன், தமிழ்ப்பித்தன் இருவருக்கும் எனது நன்றிகள்.

Thambiluvil said...

sairam
very nice article,
thanks for add
jei sairam

saisayanr@yahoo.com
saisayan@gmail.com